இரத்தத்தில் சர்க்கரை அளவு நமது ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தான் சர்க்கரை என அழைக்கப்படுகிறது. இந்த சர்க்கரையை நாம் செயல்படுவதற்கு ஏற்ற ஆற்றலாக மாற்றும் சக்தி இன்சுலினுக்கு உள்ளது. உடலில் இன்சுலின் சுரக்கும் இடம் கணையம்.
கணையத்தில் கோளாறு ஏற்பட்டு போதுமான அளவுக்கு இன்சுலின் சுரக்காத நிலையில், குளுக்கோஸ் ஆற்றலாக மாறுவதில் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் விளைவு, சர்க்கரை நோய். கணையத்தில் இன்சுலின் அறவே சுரக்காமல் போகும் நிலையில், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி நோய் தீவிரமாகும். இந்த வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுளினையே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.
ஆயுள் முழுவதும் தினமும் இன்சுலின் ஊசி மருந்தைப் போட்டுக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் இத்தகைய வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த வகை நோய்க்கு 'முதல் வகை சர்க்கரை நோய்' (Type 1) அல்லது 'ஐ.டி.டி.எம்.' (இன்சுலின் தேபெண்டன்ட் டயாபடீஸ் மில்லட்டஸ் அல்லது இன்சுலின் ஊசி மருந்தை நம்பி இருத்தல்) என்று பெயர்.
கணையத்தில் முழுமையாக இல்லாமல் ஓரளவு இன்சுலின் சுரப்பு இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகத்தான் இருக்கும். எனவே இத்தகைய சர்க்கரை நோயாளிகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இன்சுலின் ஊசி மருந்து தேவைப்படாது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இவர்கள் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டியது இருக்கும்.
இந்த வகை நோய்க்கு 'இரண்டாம் வகை சர்க்கரை நோய்' அல்லது 'என்.ஐ.டி.டி.எம்.' (நான் இன்சுலின் தேபெண்டன்ட் டயாபடீஸ் மில்லட்டஸ் அல்லது இன்சுலின் ஊசி மருந்து தேவைப்படாத வகை) என்று பெயர்.
உடலில் எவ்வித விளைவுகளையும் வெளிப்படுத்தாமல் ஓசையின்றி இருக்கும் ஆற்றல் சர்க்கரை நோய்க்கு உண்டு. பலத்த காயங்கள் ஏற்படும் போது அல்லது தலைச்சுற்றல் வரும் நிலையில் அல்லது கண்களைப் பரிசோதனை செய்யும் போது என இப்படி ஏதாவது ஒரு உடல் உபதைக்காக இரத்தப் பரிசோதனை செய்யும் நிலையில் தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தெரியவரும்.
உடலில் தலை முதல் கால் வரை அணைத்து உறுப்புகளையும் தாக்கும் ஆற்றல் சர்க்கரை நோய்க்கு உள்ளது. குறிப்பாக கண்கள், இதயம், சிறுநீரகங்கள், கால் ஆகியவற்றை தாகும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு. இன்சுளினையே நம்பியிருக்கும் முதல் வகை சர்க்கரை நோயாளிகள், ஐந்து அன்டுகல்லுகுள் விழித்திரையை சோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோய் உள்ள குழந்தைகள், நோய் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விழித்திரையை சோதனை செய்து கொண்டால் போதும்.
ஆனால் இன்சுலின் நமியிராமல் மாத்திரை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பதிக்கப்படுவதர்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏனெனில் சர்க்கரை நோய் இருப்பதையே மிகவும் தாமதமாக ஒருவர் தெரிந்து கொள்ளும் நிலையில் விழித்திரையில் பாதிப்பு தொடங்கி இருக்கும். எனவே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகள் உடனடியாக விழித்திரையை சோதனை செய்து கொள்வது அவசியம்.
சிறுநீரகங்களை ஓசையின்றி தாக்கும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே சிறுநீரக பாதிப்பு தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில் பெரும்பாலும் எவ்வித அறிகுறிகளும் இருக்காது. எனினும் ஒரு சிலருக்கு நுனிப் பாதத்தில் குத்தல் அல்லது எரிச்சல், உணர்ச்சி இன்றி பஞ்சு மெத்தையில் நடப்பது போன்று இருத்தல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு.
உங்கள் பாதத்தின் அழுத்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, அவரவருக்கு ஏற்ற சிறப்புக் காலணிகளை (எம்.சி.ஆர்.) அணிவது நல்லது. பாதத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளுக்கு ஏற்ப காலணியை சர்க்கரை நோயாளிகள் அணியும் நிலையில், பாதத்தில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொண்டு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகள் வீட்டுக்குள் நடமாடும் போது வெறும் காலோடு நடக்கக்கூடாது. காலணி அணிவது நல்லது. ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ அல்லது எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.
காலில் ஆணையோ அல்லது தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்ட முயற்சிக்காதீர்கள், டாக்டரிடம் செல்லுங்கள். பாதங்களின் மேல் ஒத்தடம் கொடுக்க சுடுநீர் போட்டில்கலையோ அல்லது உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள். சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் சர்க்கரை நோயாளிகள் உஷாராக இருப்பது அவசியம். உத்தரமாக ஒருவருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் ஒரு குலோப்ஜாமுன் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு 300 மில்லி கிராமாக அதிகரித்துவிடும். ஆக குலோப்ஜாமுன் சாப்பிடக்கூடாது. குலோப்ஜாமூனுக்குப் பதிலாக கொண்டைக் கடலை சுண்டலை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு நூறு மில்லி கிராமாக இருக்கும் அல்லது மிகக்குறைவான அளவே அதிகரிக்கும். எனவே கொண்டைக்கடலை மிக நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒருவேளை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. சதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிப்ளவர், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகளை அதிகம் சாப்பிடுவது மிக ன்று. ஏனெனில் இவற்றில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தரக்கூடியது. காய்களை அதிகமாகச் சாப்பிடும் நிலையில் அவற்றில் உள்ள நார்ச் சத்து இரத்தத்தில் உயரும் குளுக்கொசி உறிஞ்சி, சர்க்கரை அளவை சமச்சீராக வைத்திருக்க உதவுகிறது. கேரட், பீட்ருட், உருளைகிழங்கு ஆகிய வேர்க்கய்கரிகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மற்ற காய்களை விட இவற்றில் மாவுச்சத்து அதிகம்.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, தர்பூசணி பழங்களைச் சாப்பிடலாம். கொய்யாவைப் பழமாக சாப்பிடாமல் காயாக சாப்பிடலாம். அதில் உள்ள நார்ச்சத்து உதவும். குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது. மோர், உப்பு போட்ட எலுமிச்சைச்சாறு, சோடா, நீர்த்த நிலையில் உள்ள சூப்புகளை சாப்பிடலாம். அசைவ உணவில் ஆட்டு இறைச்சியை சாப்பிட கூடாது. மீன், சிக்கன், முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடலாம். மீன், சிக்கனை எண்ணையில் பொறிக்காமல் முழம்பில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் பரம்பரை நோர், தாய்க்கோ அண்ட் தந்தைக்கோ சர்க்கரை நோய் இருந்தால் முப்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீர், இரத்த பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு :
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு :
எதுவும் சாப்பிடாமல் (வெறும்வயிற்றில்), 80-100 மில்லி கிராம்
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140 மில்லி கிராம்
கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு.
எதுவும் சாபிடாமல்... 120-140 மில்லி கிராம்
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 160-180 மில்லி கிராம் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், சாப்பிட்டவுடன் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு தான் இரத்தத்தைப் பரிசொதனைக்குக் கொடுக்க வேண்டும்.
ஐந்து முக்கிய குறிப்புகள் :
1) நாள்தோறும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
2) நாள்தோறும் மொத்தமாக 500 கிராம் காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிடுங்கள்.
3) வாரத்தில் ஐந்து நாட்கள் வேகமான நடைப்பயிற்சியைச் செய்வது நல்லது. (தினமும் 30 நிமிடங்கள்)
4) நாள்தோறும் ஐந்து கிராமுக்கு குறைவான உப்பை சேர்த்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு நன்மை தரும்.
5) ஒரு மாதத்திற்கு 500 கிராமுக்கு குறைவான கொழுப்பையே உண்ணுதல் சாலச்சிறந்தது. (எண்ணெய், நெய், வனஸ்பதி, மாமிசம் உள்பட)

நண்பரே நல்ல பதிவு.
ReplyDeleteஉங்கள் தளத்தில் இருந்து நல்ல தகவல் எடுத்து என் தளத்தில் இட உங்கள் அனுமதி எதிர்ப்பார்க்கிறேன். விருப்பம் இருந்தால் என் தளத்தில் வந்து சொல்ல முடியுமா நண்பா.