Friday, August 20, 2010

வாய்ப்புண் குணமாக

வாய்ப்புண் குணமாக நெஞ்சில் இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.  வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி இலையை மென்று தின்றால் குணமாகும்.  மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் மற்றும் குடல் நோய்கள் குணமாகும்.

Thursday, August 19, 2010

பேதியை நிறுத்த

பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து.  வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும்.  மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும். 

வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது.  இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது. 

வழுக்கையில் முடிவளர

வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே.  கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.

Wednesday, August 18, 2010

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள்.  ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.  அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

Tuesday, August 17, 2010

ஜலதோஷம்

 ஜலதோஷம் என்பது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. காரணம் நமது தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதே.  ஈரக்காற்றில் உலவுவதால் அல்லது மழையில் நனைந்ததினால் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி  பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

Wednesday, August 4, 2010

தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் சுழித்து குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி தீரும்.  இதை தொடர்ந்து பூசி வர தேமல் மற்றும் தோல் கரும்புள்ளிகள் மறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் நல்ல மலர்ச்சியடையும்.

கீழாநெல்லி இலை மற்றும் கொதுமலை இலையை உள்ளுக்கும் சாப்பிட்டு இன்னும் முகத்தை மெருகேற்றலாம்.

Sunday, August 1, 2010

ஆறாதபுண் குணமாக

மருதாணி இலைகளை துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் காய்ந்தவுடன் அதில் இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் மைபோல் அரைத்து பின் தேவையான அளவு துணியில் பூசி, மருந்தை புண்ணின் மீதுப்படும்படி வைத்து கட்டு போட வேண்டும்.  இனது நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் புண் நன்றாக ஆறிவிடும்.