Monday, July 19, 2010

மார்பகப் புற்று நோய்

பொதுவாக பெண்களுக்கு வருகின்ற புற்று நோயில் மார்பகப் புற்று நோய் இரண்டாவது முக்கிய நோயாகும் (கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் முதல் இடத்தில் இருக்கின்றது) 35 வயதிற்கு மேல் ஏற, ஏற இந்த நோய் தாக்கப் படுவதற்கான அபயம் அதிகரிக்கிறது.  மாதவிடாய் ஆகின்ற பெண்களை விட மாதவிடாய் நிதர பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.

மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் எவை?

1. முதல் குழந்தை பேறு 35  வயதிற்கு மேற்பட்டு உண்டானாலும் அல்லது குழந்தை பேறு இல்லாமல் இருந்தாலும் இந்த நோய் வருவதற்கு வேண்டிய அபாயங்கள் அதிகம்.  அதிகமான குறை பிரசவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தாலும் அல்லது விரைவில் நிறுத்தினாலும் நோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

2. அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவை உண்பவர்களுக்கும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கும், உடல் பருமனாகக் கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

3. தொடர்ந்து கதிர் வீச்சுக்கு உட்படுபவற்குளுக்கும், மார்பக புற்றுநோய் வருவதற்கு வேண்டிய வாய்ப்பு அதிகம் உள்ளது. 

மரபு அணு வழியாக இந்த நோய் பரவுமா?

மரபு அணு வழியாக மார்பகப் புற்று நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  10% மார்பக புற்றுநோய் மரபு அணு வழியாக பரவுகிறது. முக்கியமான மரபு அணுக்கள் BRCA-1, BRCA-2.

30 வயதிற்கு உட்பட்டு மார்பக புற்றுநோய் வந்தாலோ, பரம்பரையில் மூன்று பேருக்கு மேற்பட்டு இந்த நோய் தாக்கப் பட்டு இருந்தாலோ ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் புற்றுநோய் வந்தாலோ, இரண்டு மார்பகத்திலும் புற்றுநோய் வந்தாலோ மரபணு வழியாகவர பயப்பு உள்ளது.

சாதாரண மார்பக கொழுப்பு கட்டி மார்பக புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

Jibroma போன்ற கட்டிகள் புற்றுநோயாக மாறவே மாறாது.  ஆனால் சாதாரண கட்டியில் ATYPI CAL இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. 

மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எவை?

மார்பகத்தில் கட்டி காணப்படுதல் அந்த காடியில் வலி ஏற்படுதல் மார்பக காம்பில் நீர் போன்ற திரவ வடிதல் 

மார்பக புற்று நோயிற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

அறுவை சிகிச்சை முறை, நுண் கதிர் சிகிச்சை முறை, புற்றுநோய் மருந்து செலுத்துதல் முறை ஆகியவைகள் உள்ளன.

அறுவை சிகிச்சை முறையில் என்ன முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இங்கே உள்ளது.  முன்பெல்லாம் முழு மார்பகத்தை எடுத்துதான் குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முறை இருந்தது.  ஆனால் இன்றோ கட்டி சிறியதாக இருந்தால் கட்டியை மட்டும் அகற்றி மார்பகத்தின் அழகும், அளவும் முற்றிலுமான குணப்படுத்த வேண்டிய முறை பின்படுத்தப்படுகிறது.

நோயை தடுக்கும் முறைகள் என்னென்ன? 

குழந்தை பேற்றை இருபதில் இருந்து இருபத்தைந்து வரை வைத்துக் கொள்ளவேண்டும்.  தேவையற்ற கரு கலைப்ப்பைத் தவிர்க்க வேண்டும்.  குழந்தைகளுக்கு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.  கொழுப்பு சாது நிறைந்த உணவை குறைக்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.  உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும். 

மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப நிலையில் கண்டறிய முடியுமா? 

நிச்சயமாக முடியும்.  மோனோ கிராம் என்ற பரிசோதனையின் மூலம் மார்பகத்தில் கட்டி வருவதற்கு முன்பே மார்பக புற்று நோய் கண்டறிய முடியும். மார்பக புற்றுநோயின் மகள்களும், சகோதரிகளும் இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.  எல்லா பெண்களும் மார்பக புற்றுநோயை பற்றி முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.  புற்றுநோய் வருவதை தடுக்கும் முறைகளை அறிந்து அதற்கான முழு முயற்சிகாலையும் செய்யவேண்டும்.  நோய் வந்தவர்களும் வைத்திய முறையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பயத்தை தவிர்த்து தைர்யமாக இருக்கவேண்டும். 

No comments:

Post a Comment