Friday, August 20, 2010
வாய்ப்புண் குணமாக
வாய்ப்புண் குணமாக நெஞ்சில் இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி இலையை மென்று தின்றால் குணமாகும். மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் மற்றும் குடல் நோய்கள் குணமாகும்.
Thursday, August 19, 2010
பேதியை நிறுத்த
பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து. வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும். மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும்.
வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது. இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது.
வழுக்கையில் முடிவளர
வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே. கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
Wednesday, August 18, 2010
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
Tuesday, August 17, 2010
ஜலதோஷம்
ஜலதோஷம் என்பது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. காரணம் நமது தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதே. ஈரக்காற்றில் உலவுவதால் அல்லது மழையில் நனைந்ததினால் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
Wednesday, August 4, 2010
தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய
கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் சுழித்து குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி தீரும். இதை தொடர்ந்து பூசி வர தேமல் மற்றும் தோல் கரும்புள்ளிகள் மறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் நல்ல மலர்ச்சியடையும்.
கீழாநெல்லி இலை மற்றும் கொதுமலை இலையை உள்ளுக்கும் சாப்பிட்டு இன்னும் முகத்தை மெருகேற்றலாம்.
கீழாநெல்லி இலை மற்றும் கொதுமலை இலையை உள்ளுக்கும் சாப்பிட்டு இன்னும் முகத்தை மெருகேற்றலாம்.
Sunday, August 1, 2010
ஆறாதபுண் குணமாக
மருதாணி இலைகளை துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் காய்ந்தவுடன் அதில் இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் மைபோல் அரைத்து பின் தேவையான அளவு துணியில் பூசி, மருந்தை புண்ணின் மீதுப்படும்படி வைத்து கட்டு போட வேண்டும். இனது நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் புண் நன்றாக ஆறிவிடும்.
Monday, July 26, 2010
இருமல் குணமாக
இருமல் குணமாக அரச மரத்துப்பட்டையை பொடியாக்கி காயவைத்து பின் வறுத்து கரிபோல் ஆனவுடன் தூள் செய்து கொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு கரண்டி அளவு பொடித்தூளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடித்து வர நல்ல பலன் தெரியும்.
நாள் தவறாமல் துளசி இலைகளை காலையில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வர இருமல் சளி அறவே நெருங்காது.
சளிப் பிடிப்பதில் பெரும்பங்கு நாம் குடிக்கும் தண்ணீரே காரணம். ஆகவே எந்த தன்நீரானாலும் காய்ச்சி குடித்து பழகுங்கள். வெளியில் சென்று உணவு எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் காய்ச்சிய நீர் அல்லது அகோபினா அண்ட் கின்லே போன்ற தரமான பாக்கேஜ் குடிநீரை குடிக்க பழகினால் சளி பிடிப்பதில் இருந்து தப்பிக்கலாம்.
Sunday, July 25, 2010
மஞ்சள் காமாலை குணமாக
மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.
அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Saturday, July 24, 2010
முடி உதிர்வதை தடுக்க
முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். பேன் நீங்கும்.
முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு. அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.
நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.
தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.
தொண்டை சதை வளர்ச்சி குறைய
தொண்டை சதை வளர்ச்சி குறைய வில்வ இலைச் சாறு, துளசி இலைச்சாறு நூறு வீதம் எடுத்து நல்லெண்ணெய் ஐநூறு மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி எண்ணெயை போட்டிளில் வைத்து கொள்ளவும்.
தினசரி ஒரு கரண்டி அளவில் எண்ணெய் எடுத்து வயில்விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். இதுமாதிரி குறைந்தது பத்து நாட்கள் கொப்பளிக்க தொண்டை சதை வளர்ச்சி குறைந்து குணம் தெரிய ஆரம்பிக்கும்.
தொடர்ந்து செய்து வர நல்ல குணம் உண்டாகும்.
Friday, July 23, 2010
தலை சுற்றல் குணமாக
தலை சுற்றல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவற்றை ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அரை கரண்டி சாப்பிட்டு வர வேண்டும். இதை சுமார் நாற்பது நாட்கள் செய்தால் பூரண குணமடையலாம்.
Subscribe to:
Posts (Atom)